உள்நாடுபிராந்தியம்

ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய மாணவன் – இலங்கையில் சம்பவம்

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தண்டித்த நிலையில் மாணவன் வீடு சென்று கிருமி நாசினியை அருந்தியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தன்னிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக சென்றமையால் ஆசிரியர் மாணவனை தண்டித்துள்ளார்.

அதன் பின் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தண்டனை வழங்கிய குறித்த ஆசிரியர் ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவனுக்கு தடியால் தாக்கிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டவர் என அறியவருகிறது.

குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட போது தான் விடுமுறையில் நிற்பதாகவும் பாடசாலை ஆசிரியர் மாணவனைப் பேசியதாகவும் பின்னர் வீடு சென்ற மாணவன் மருந்து அருந்தியதாக அறிந்ததாக தெரிவித்தார்.

Related posts

அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல்

editor

இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா