உள்நாடு

ஐந்து மாதங்களில் 23,744 டெங்கு நோயாளர்கள் பதிவு

மே மாதத்தில் இலங்கையில் மொத்தம் 6,042 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதையும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன, மார்ச் மாதத்தில் 3,766 பேரும் ஏப்ரல் மாதத்தில் 5,166 பேரும் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், 23,744 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

பெரும்பாலான நோயாளிகள் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.

Related posts

ஓய்வூதியத்துடன் மேலதிக கொடுப்பனவு – தினேஷ் குணவர்தன.

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்புக்கு வந்த குடும்பம் பயணித்த வாகனம் விபத்து

“எதிர்க்கட்சி தலைவராக நாமல்?”