அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர தலைமையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நகர அபிவிருத்தித் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம், கொழும்பு மாவட்டத்தில் கால்வாய் சுத்திகரிப்பு மற்றும் கழிவு முகாமைத்துவத் திட்டங்கள், நீர்த்திட்டங்கள் மற்றும் வீடமைப்பு உதவித் திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த வேலைத்திட்டங்கள் ஒவ்வொன்றும் திட்டமிட்ட உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரசல் அபோன்சு, கபில ஜனக்க பண்டார ஆகியோருடன் நிதி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் விஜித ஹெராத்

editor

உண்மையிலேயே அமைச்சர்கள் இராஜினாமா செய்தார்களா? – கம்மன்பிலவுக்கு சந்தேகம்

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அழைப்பாணை