அரசியல்உள்நாடு

மீனவர் பிரச்சினைக்கு தீர்வைக் கோரி பாராளுமன்றில் பிரேரணை கொண்டுவருகிறார் – நிசாம் காரியப்பர் எம்.பி

கிழக்கு மாகாண ஆழ்கடலில் மீனவர்கள் பயன்படுத்தும் வலைகளும், மீன்களும் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்களுக்கு எதிராக ஒரு பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ நிசாம் காரியப்பர் இன்று (05) பாராளுமன்றத்தில் முன்வைக்கின்றார்.

குறித்த பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹிஸ்புல்லாஹ் ஆமோதித்து பேசுவார்.

இந்த பிரேரணையின் மூலம், இவ்வகை கொள்ளைகளை தடுக்கும் நோக்கில் கடற்படைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தப்படுவதோடு, இதற்கு முந்தைய மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

மேலும், இது சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சர் உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும் கோரப்படுகிறது.

-ஊடகப் பிரிவு

Related posts

பண மோசடி – இந்திய பிரஜை ஒருவர் கைது

ஓட்டமாவடியில் கோர விபத்து – ஒருவர் பலி

editor

225 உறுப்பினர்களும் அழிய வேண்டும் – காவிந்த ஜயவர்தன கடும் விசனம்.