உள்நாடு

ரயில் பாதையில் பயணித்த தம்பதி பலி

தெஹிவளை ரயில் பாதையில் பயணித்த தம்பதியொன்று கொழும்பு கோட்டையில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (04) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பதுளை, பதுலுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சாய்ந்தமருதுவில் வெள்ளை வேன் கடத்தல் – விழிப்பாக இருக்குமாறு பள்ளிவாசல் எச்சரிக்கை

கல்வியாண்டு 2022 இற்கான பரீட்சை தினங்கள்

புகையிரதத்தில் மோதி 23 வயது இளைஞன் பலி

editor