வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவால் விரைவில் விதிக்கப்படவுள்ளத் தடை!!

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்க சென்று திரும்பும் அனைத்து வானூர்திகளிலும் மடி கணினி கொண்டுச் செல்ல விரைவில் தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜோன் கெல்லி இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சகல வானூர்தி நிலையங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா வந்து செல்லும் அனைத்து வானூர்திகளிலும் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க மக்கள் உள்ள வானூர்திகளை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் துருக்கி ஆகிய 10 வானூர்தி நிலையங்களில் இருந்து மடிக்கணினிகளை எடுத்துவர அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

One-day service by Monday – Registration of Persons Dept.

අබ්දුල්ලා යළි රිමාන්ඩ්

சுவையான ஆரஞ்சு சாலட்