அரசியல்உள்நாடு

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 36.98 பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியமை அல்லது நேர்மையற்ற முறையில் செயற்பட்டதாக தெரிவிக்கப்படும் வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாகப் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை பெயரிட சட்டமா அதிபர் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உயர்நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனுவில், உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.துரைராஜா, ஜனக் டி சில்வா ஆகியோரின் ஒப்புதலுடன் உயர் நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன மேற்படி தீர்ப்பை அறிவித்தார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட வழக்குகளில் ரவி கருணாநாயக்கவை பிரதிவாதியாகப் பெயரிட சட்டமா அதிபர் எடுத்த முடிவை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு இரத்து செய்யப்படுவதாகவும், குறித்த தீர்ப்பு தொடர்பாக ரவி கருணாநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!

மூடப்படும் வீதிகள் தொடர்பில் வெளியான தகவல்

editor

QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை