அரசியல்உள்நாடு

குச்சவெளி மீனவர் மீதான தாக்குதலை வண்மையாக கண்டிக்கிறேன் – முன்னாள் எம்.பி தௌபீக்

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தை சேர்ந்த மீனவர் இஜாஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை கண்டிப்பதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய கடற்டையினர் மீது உடனடி சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பாதுகாப்பு தரப்பினரிடம் தான் வேண்டுகொள் விடுப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ் தௌபீக் தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேசத்திலிருந்து திருகோணமலை கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற மீனவர் மீது, கடற்படையினரால் நேற்று (03) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரித்தார்.

இந்த சம்பவம் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் மீது மேற்கொள்ளப்படும் மனிதாபற்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மீனவர்கள் பாதுகாப்பாக, அச்சமின்றி தொழிலுக்கு சொல்லக்கூடிய சூழ்ந்நிலையை இந்த அரசு உருவாக்க வேண்டும் என அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அதிகளவான பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 14ஆவது இடம்!

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – பிரதமர்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு வீட்டுரிமைப் பத்திரம்!