உள்நாடுபிராந்தியம்

தொழிலதிபரின் வீட்டில் 55 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு!

ஹொரணை பகுதியில் உள்ள ஒரு பிரபல தொழிலதிபரின் வீட்டிலிருந்த சுமார் 55 கிலோ தங்கத்தை புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவற்றின் பெறுமதி சுமார் ஒரு பில்லியன் ரூபா எனக் கூறப்படுகிறது.

இது நீண்ட காலமாக தான் சேமித்து வைத்திருக்கும் தங்க இருப்பு என்று தொழிலதிபர் கூறியுள்ளார், ஆனால் அத்தகைய இருப்பு எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது குறித்த தகவல்களை அவரால் வெளியிட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த தங்கத்தைப் பறிமுதல் செய்யும் திட்டம் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

Related posts

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்

எரிவாயு விவகாரம் : ஆராய நாளை விசேட ஆலோசனைக் குழு கூடுகிறது

அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஆட்சிக்காக ஒன்றிணைவோம் – சஜித் பிரேமதாச

editor