வகைப்படுத்தப்படாத

40 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து சாரதி காயம்

(UDHAYAM, COLOMBO) – வட்டவலை  பகுதியில் 40 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் சாரதி காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவலை குயில்வத்தை பகுதியிலே 29.05.2017.   1.30 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது

வட்டவலையிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த முச்சக்கரவண்டியானது ஏரிவாயு லொறியொன்றுக்கு முந்திச்செல்ல இடம் கொடுக்க முற்பட்டபபோது பாதையை விட்டு விளகி பாள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

கால நிலை சீர்கேட்டினால் பாதை வழுக்கல் நிலையே விபத்துக்கான காரணம் என வட்டவலை பொலிஸார் தெரிவித்ததுடன் கயமுற்ற சாரதி வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

වෛද්‍ය සාෆිට එරෙහිව අධිකරණයට මෝසමක්

வடக்கில் அடையாளம் காணப்படாத காய்ச்சல்

Navy arrests 3 persons with ammunition