உள்நாடு

பாணந்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

பாணந்துறை, வேகட பகுதியில் கடந்த 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்திற்கு முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை, கவிராஜ மாவத்தையைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும், மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் சம்பவத்திற்கு முன் தினம் இரவு சந்தேக நபரின் வீட்டில் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற சஷீந்திர ராஜபக்க்ஷ

மேலும் 397 பேர் இன்று பூரண குணம்

SJB இனால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு