உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வௌியான அறிவிப்பு

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (31) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த முறை மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 274 ஆகவும், லங்கா சூப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ. 325 ஆகவும் உள்ளது.

95 ஒக்டேன் ஒரு லிட்டரின் விலை ரூ. 341 ஆகவும், 92 ஒக்டேன் ஒரு லிட்டரின் விலை ரூ. 293 ஆகவும் உள்ளது.

இதேபோல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டரின் விலை ரூ. 178 ஆக மாற்றமின்றி காணப்படுகிறது

Related posts

உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயா நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டம்

editor

தம்புள்ளை வெப்பநிலை களஞ்சியம் திறப்பு – உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor

லங்கா ஐ.ஓ.சி நிறுவன எரிபொருள் விலையும் அதிகரிப்பு