அரசியல்உள்நாடு

விசா பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணியிடம் போலந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மே 29 ஆம் திகதி அலரிமாளிகையில் சந்தித்தார்.

நாட்டுக்கு வருகை தந்துள்ள போலந்து தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், அத்துடன் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழிலாளர்கள் இடம் பெயர்வு, உயர் மட்ட சுற்றுலா, டிஜிட்டல் நிர்வாக முறைமைகள் போன்ற பல முக்கிய துறைகள் குறித்து பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, போலந்து செல்லும் இலங்கையர்கள் முகம்கொடுக்கும் விசா பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரு. ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி தெரிவித்தார்.

இரு நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய சங்கத்தின் தூதுவர் கார்மென் மோரேனோ, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் EEAS துணைத் தலைவர் மோனிகா பைலெய்ட், புதுடில்லியில் உள்ள போலந்து தூதரகத்தின் பொறுப்பதிகாரி பியோட்ர் ஸ்விட்டல்ஸ்கி மற்றும் புதுடில்லியில் உள்ள போலந்து தூதரகத்தின் பிரதிநிதிகள் Joanna Dopierała-Konkołowicz, Marta Stachowiz, Marta Stachowich, Małgorzata Kopeć, மற்றும் Konrad Laskowski ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.

-பிரதமர் ஊடகப் பிரிவு

Related posts

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர் ஜனாதிபதியினை சந்தித்தனர்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் கலந்துரையாடல் – சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவ நிபுணர் குழு நியமனம்

editor

தேசிய விருது விழாவில் கிழக்கு மாகாணத்தின் பெருமைசேர்த்த சப்னாஸ்!

editor