உலகம்சினிமா

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் ராஜேஷ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று வியாழக்கிழமை (29) தனது 75ஆவது வயதில் காலமானார்.

1949ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்த இவர், திரையுலகில் மிகப் பிரபலமான நடிகர்களுள் முக்கியமானவர்.

1974இல் இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய “அவள் ஒரு தொடர்கதை” படத்தின் மூலம் நடிகர் ராஜேஷ் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

அந்த ஏழு நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர், ஆட்டோகிராப், ஒரு கல் ஒரு கண்ணாடி, குழந்தை ஏசு, ஜெய்ஹிந்த், வரலாறு, ரமணா, யாரோ எழுதிய கவிதை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, மகாநதி, பொங்கலோ பொங்கல் என பல திரைப்படங்களில் இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழி்ல் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்திருந்தார்.

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ்.

மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்துள்ளார் நடிகர் ராஜேஷ்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

உலகில் பாதுகாப்பான நகரங்களில் ‘துபாய்’

உலகில் முதன் முறையாக சீனாவில் மனிதருக்கு பரவிய H10N3 பறவை காய்ச்சல்

இம்ரான் கான் ஆட்சி தப்புமா?