அரசியல்உள்நாடு

ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்குமாறு ஆளுனரிடம் தாஹிர் எம்பி கோரிக்கை!

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த, தூரப் பிரதேசங்களுக்கு புதிதாக நியமனம் பெற்ற ஆங்கில ஆசிரியைகளின் அசெளகரியங்களை கருத்தில் கொண்டு பொருத்தமான இடமாற்றத்தை வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், கிழக்கு ஆளுநரிடம் நேரடியாக வலியுறுத்தினார் .

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

தூரப் பிரதேசங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியைகள் எதிர்கொள்ளும் மொழி மற்றும் பிரயாண அசௌகரியங்களை கிழக்கு மாகாண ஆளுநருக்கு விரிவாக இதன்போது எடுத்துரைத்திருந்தார்.

இதற்கு பதில் வழங்கிய ஆளுநர், இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதந்திர தினத்தினை முன்னிட்டு போக்குவரத்து மட்டு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

editor

நாளை வேலைநிறுத்தம் அர்த்தமற்றவை – திலும்