அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவோம் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி. நம்பிக்கை

கொழும்பு மாநகரசபையின் ஆட்சியை எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும்.

எதிர்வரும் 2ஆம் திகதி அதனை கண்டுகொள்ளலாமென ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது குறித்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை கிடைத்துள்ள மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு நாங்கள் தடையாக இருப்பதில்லை. அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, அந்த சபைகளில் எதிர்க்கட்சியில் எந்த கட்சி அதிக ஆசனங்களை பெற்றிருக்கின்றதோ அந்த கட்சியில் தலைவர் ஒருவரை தெரிவு செய்துகொண்டு ஆட்சியை கொண்டுசெல்ல தீர்மானித்திருக்கிறோம்.

அதன் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு 48 ஆசனங்களே கிடைக்கப்பெற்றிருக்கின்றன. எதிர்க்கட்சிகளுக்கு மொத்தமாக 69 ஆசனங்கள் இருக்கின்றன.

அதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தற்போது மேற்கொண்டு வருகிறோம்.

எதிர்க்கட்சியில் ஐக்கிய மக்கள் சக்திக்கே அதிக ஆசனங்கள் இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மேயர் ஒருவர் பெயரிடப்பட்டு, ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் அவரை தெரிவுசெய்துகொள்ள தீர்மானித்திருக்கிறோம்.

அதேநேரம் ஜனாதிபதியின் தேசிய மக்கள் சக்தியும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈட்டு வருகிறது. அற்காக சுயாதீன குழுக்களின் ஆதரவை கோரி, அவர்களை அழைத்து ஜனாதிபதி கலந்துரையாடி இருந்தார்.

சுயாதீீன குழுக்களில் மொத்தமாக 9 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில் 3 அல்லது 4பேரே அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பார்கள்.

அவ்வாறு அவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளி்த்தாலும் எங்களுக்கே பெரும்பான்மையான ஆதரவு இருக்கிறது. அதனால் எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவது உறுதியாகும்.

அதேநேரம் உள்ளுராடட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை பெயரிடுவதில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒருசில தொகுதி அமைப்பாளர்கள் தங்களின் அமைப்பாளர் பதவிகளை இராஜினாமா செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

அவர்களுக்கு தேவையானவர்களை நியமித்துக்கொள்ள முடியாமல் போன ஒரு ஆதங்கத்தினாலே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

என்றாலும் அவர்களுடன் தற்போது இதுதொடர்பில் கலந்துரையாடி, அவர்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்தி வருகிறோம்.

இவ்வாறு பதவி விலகுவதாக அறிவித்த ஒருசிலர் நிலைமையை உணர்ந்து தற்போது மீண்டும் அந்த பதவிகளை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

இன்னும் சில நாட்களில் ஏனையவர்களும் தங்களின் தீர்மானங்களை மாற்றிக்கொள்வார்கள் என நம்புகிறோம் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

வசந்த முதலிகே 90 நாள் காவலில் வைக்கப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

editor

ஜனாதிபதி – பொம்பியோ இடையிலான சந்திப்பு