உள்நாடு

சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ – பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்!

குருணாகல் மாவட்டம் கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இப்பாகமுவ – மடகல்ல வீதியில் நபரொருவரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பாகமுவ – மடகல்ல வீதியில் கடந்த 24ஆம் திகதி அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சோதனைக்குட்படுத்தியுள்ளார்.

இதன்போது இந்த மோட்டார் சைக்கிளில் பெண்ணொருவரும் நபரொருவரும் பயணித்துள்ளனர்.

சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருக்கும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் காணொளியாக எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொகரெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வீடியோ | கடல் வழியாக தமிழகத்திற்கு அகதியாக சென்ற இலங்கை தமிழர்

editor

வீதியை கடக்க முயன்ற நபர் மீது கார் மோதி கோர விபத்து – ஒருவர் பலி

editor

எல்பிட்டியவில் நடந்தது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அல்ல என பொலிஸார் தெரிவிப்பு

editor