அரசியல்உள்நாடு

மலானி பொன்சேகாவின் மறைவு நாட்டிற்கும் திரைப்படத் துறைக்கும் பாரிய இழப்பாகும் – சஜித் பிரேமதாச

நாட்டு மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு நடிகையாகவும், உள்நாட்டு கலை மற்றும் சினிமாத் துறைகளுக்கு தனித்துவமான சேவையை ஆற்றிய கலைஞராக மலானி பொன்சேகாவை விவரிக்கலாம்.

பிரபல நடிகையாக திரைப்படம் மற்றும் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைக்காக தேசிய மட்டத்திலும் சர்வதேச அளவிலும் பல கௌரவங்களுக்கு பாத்திரமாக திகழ்ந்தார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கை சினிமாவின் ராணியாக கருதப்படும் மாலனி பொன்சேகாவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) இறுதி அஞ்சலி செலுத்தினார்.

திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடலுக்கு இறுதிய அஞ்சலி செலுத்தியதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரும் பிற கலைஞர்களும் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டு, நாட்டின் கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக அவரது தலைமையின் கீழ் பணியாற்றினர்கள்.

அவரது திடீர் மறைவு நாட்டிற்கு ஒர் பேரிழப்பாகும். அவர் ஒரு தேசிய சொத்தாக கருதப்பட்டவர்.

அவரது மறைவால் நான் மிகவும் மனவேதனையடைகிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Related posts

சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை [VIDEO]

நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு

அனர்த்தத்தை குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தல்