உள்நாடுகாலநிலை

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்

எதிர்வரும் காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

அவசர தேவைகளை தீர்ப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம் – வைத்தியர் அருச்சுனா

editor

210 மில்லியன் பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு!

editor