அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில்

ஹெவ்லொக் சிட்டி வீட்டு வளாகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் வைத்திய பரிசோதனைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி திசாநாயக்க தெரிவித்தார்.

ஹெவ்லொக் சிட்டி வீட்டுத் வளாகத்தில் T56 துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துமிந்த திசாநாயக்க, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, துமிந்த திசாநாயக்க மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை வழங்க நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பரிசோதனைக்காக அவர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

அம்பாறையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

editor

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு – மஹிந்த ராஜபக்ஷ

அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்த அரசு தீர்மானம்