அரசியல்உள்நாடு

இணை அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் அசோக சேபால

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் அனகிபுர அசோக சேபால தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட சிறு கட்சிகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆரம்பத்திலிருந்தே தாய்க் கட்சியில் இருந்தவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தலைமையகம் நிறைவேற்றாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனகிபுர அசோக சேபால தெரிவித்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை உடனடியாக கட்சித் தலைவர், சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு உத்தியோகப்பூர்வமாக அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்ததற்கான காரணத்தை விளக்குவதற்காக இன்று (25) காலை தலவாக்கலையில் உள்ள தனது அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“மாவட்ட இணை அமைப்பாளராக என்னை நம்பி வாக்குகளைப் பெற்ற உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான பலத்தையும் ஆதரவையும் தலைமையகம் வழங்கவில்லை.

மேலும் தாய்க் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் சிறிய கட்சிகளின் நோக்கங்களை மட்டுமே தலைமையகம் எப்போதும் நிறைவேற்ற முயற்சி செய்து வருவருவதால், நாம் இந்தப் பதவிகளை வகிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என்றார்.

-ஆர்.எப்.எம்.சுஹெல்

Related posts

ஜனாதிபதி அநுர மற்றும் மியன்மார் தூதுவர் சந்திப்பு

editor

கொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள வேண்டுகோள்