அரசியல்உள்நாடு

நான்கு பேருந்து தரிப்பிடங்கள் மேம்படுத்தப்படும் – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பேருந்து தரிப்பிடங்களில் நான்கு (04) பேருந்து தரிப்பிடங்கள் அபிவிருத்தி செய்து அவை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாண அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பேருந்து நிலைய நிர்வாகத்திற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (23) சப்ரகமுவ மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து மாகாண ஆளுநர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மேற்படி மாகாணத்தில் நான்கு (04) பேருந்து நிலையங்களை மேம்படுத்தப்பட உள்ளதாக
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, வரக்காபொல மற்றும் ரம்புக்கனை ஆகிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்து பராமரிக்க உத்தேசித்துள்ளது.

அத்துடன், நாடு முழுவதும் 50 பேருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்து பராமரிக்க மேற்படி அமைச்சு முடிவு செய்துள்ளது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு பேருந்து நிலையங்களை அபிவிருத்தி செய்து பராமரக்கப்பட உள்ளது.

மேற்படி பேருந்து நிலையங்களை சுத்தம் செய்து பராமரிப்பதற்காகவும் மற்றும் அபிவிருத்தி செய்யப்படவுள்ள 04 பேருந்து நிலையங்களையும் பராமரிப்பதற்காகவும் மாகாண மட்டத்திலான குழுக்களை நியமிக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அதற்கான குழுக்கள் நியமிக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கைகளை தம்மிடம் சமர்ப்பிக்குமாறு சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மேலும் தெரிவித்தார்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகளும் வழமைக்கு

சஜித் ஹிருணிகாவை சந்தித்தார்