பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (22) பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுவின் முதலாவது கூட்டத்தின் போது அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிரி பஸ்நாயக்க முன்மொழிந்துள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அதனை வழிமொழிந்து உறுதிப்படுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் நிபுண ஆரச்சி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி மற்றும் திலிண சமரகோன் உட்பட குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.