உலகம்

கிரீசில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

கிரீசில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காலை 8.49 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 .2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

104 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 35.96 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 25.79 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கிரீசில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜோர்ஜியாவிலும் பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியது

வனுஷி நியூசிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு

யாரும் அமெரிக்கா நோக்கி வர வேண்டாம் : பைடன் திட்டவட்டம்