உள்நாடு

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, நேற்று (21) நடைபெற்ற கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையானது, ஓரிரவு கொள்கை விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 7.75% வீதத்தில் பராமரிக்க தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.

நாணயக் கொள்கை நிலையின் அளவிடப்பட்ட இத்தளர்த்தலானது உலகளாவிய நிச்சயமின்மைகள் மற்றும் தற்போதைய குறைவடைந்த பணவீக்க அழுத்தங்கள் என்பவற்றிற்கு மத்தியில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கி வழிநடாத்துவதில் ஆதரவளிக்குமென சபை அபிப்பிராயப்படுகின்றது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டி?

editor

புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் வர்த்தமானி வெளியானது

‘கடினமான காலங்களில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்’