உள்நாடு

20, 000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற மகாவலி அதிகார சபை முகாமையாளர் கைது!

மகாவலி அதிகார சபையின் முகாமையாளர்களில் ஒருவர் 20,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

20 பேர்ச் நிலத்தை மாற்றுவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரி இந்த 20,000 ரூபாவை இலஞ்சமாக கோரியிருந்தார்.

அதன்படி, மகாவலி அதிகார சபையின் சேனபுர பிரதேச முகாமையாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட சந்துன்பிட்டிய பிரிவு முகாமையாளர் அலுவலகத்தின்எ முகாமையாளர் நேற்று (21) பகல் சந்துன்பிட்டிய மகாவலி அலுவலகத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Related posts

அக்குரணை மற்றும் பேருவளை பிரதேசங்கள் மீண்டும் திறக்க தீர்மானம்

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு – மூவர் கைது

கொரோனாவை கட்டுப்படுத்த சுமார் 8 கோடிக்கு இயந்திரம்