உள்நாடு

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி – இரு பெண்கள் கைது

ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் பத்தரமுல்லை மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 40 மற்றும் 68 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (21) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

கொழும்பு பாயிஸ் காலமானார்!

அமரவீர, லசந்த, துமிந்த ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவு!

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..