அரசியல்உள்நாடு

சுகாதாரம், ஊடகத்துறை பதில் அமைச்சராக ஹன்சக விஜேமுனி

சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை பதில் அமைச்சராக வைத்தியர் ஹன்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக வைத்தியர் ஹன்சக விஜயமுனி நியமிக்கப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் ஜயதிஸ்ஸ சென்ற காரணத்தினால் அவர் நாடு திரும்பும் வரை இடைக்காலமாகச் செயல்பட இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக வைத்தியர் ஹன்சக விஜேமுனி உள்ளார்.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை பிரதி அமைச்சராகப் பணியாற்றுகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் கீழ்