உள்நாடுகாலநிலை

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையை அடுத்து, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே அவதானத்துடன் இருக்குமாறு அந்த நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய, கண்டி மாவட்டத்தில் பஸ்பாகே கோரலே, கேகாலை மாவட்டத்தில் புலத்கோஹுபிட்டிய, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் வரகாபொல, இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட, கிரியெல்ல மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று(18) காலை 10.00 மணி முதல் நாளை (19) காலை 10.00 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது

Related posts

அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி