உள்நாடுகாலநிலை

பலத்த மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த மழை தொடர்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (18) காலை 9.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களும் அவதானமாக இருக்குமாறு குறித்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாகவும், அதன் தாக்கம் காரணமாக, இன்று (18) மற்றும் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தனியார் வகுப்புகள் நடத்த இரண்டு வாரங்களுக்கு தடை

வாக்காளர் பெயர்பட்டியல் புதிய முறையின் கீழ் திருத்தம்

விசா அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு