ஹபரணை – திருகோணமலை வீதியில் அநுராதபுரம், ஹபரணை, கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வாகனமொன்று இரத்தினபுரியில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் திருகோணமலை கந்தளாய் பகுதியைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர் ஆவார்.
இதனையடுத்து விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.