உள்நாடு

நீண்ட தூர ரயில் சேவைகள் இன்று மட்டுப்படுத்தப்பட்டன!

ரயில் நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று (17) நீண்ட தூர ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, காலி, நீர்கொழும்பு மற்றும் வெயங்கொட போன்ற குறுகிய பாதைகளில் மட்டுமே ரயில்கள் இயங்கும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர கூறுகிறார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் நேற்று (16) நள்ளிரவு முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.

அடுத்த வாரத்துக்குள் இந்தக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை மேற்கொள்வோம் என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

சுதந்திர தின பிரதான வைபவத்தினை புறக்கணிக்கிறார் பேராயர் மெல்கம் ஆண்டகை

4 மாதங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

நான் குற்றவாளி இல்லை – நீதிமன்றில் டயானா அறிவிப்பு.