உள்நாடுபிராந்தியம்

29 வயதுடைய பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை

மாத்தளை, உக்குவெல, உடங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இளம் தாய் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக கந்தேநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று வியாழக்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உக்குவெல, உடங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த தாயின் சடலம் மாத்தளை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கந்தேநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாணந்துறை அம்பியூலன்ஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முழு விபரம்

மீண்டும் நிறுத்தப்பட்ட இந்தியா- இலங்கை கப்பல் சேவை

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு