உள்நாடு

யோசித்த ராஜபக்ஷ, டேஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேஸி பொரஸ்ட் ஆகியோர் மீதான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, மீண்டும் ஜூலை 11 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்படுமென கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த முறைப்பாடு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் டேஸி பொரஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

அவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ், நீதிமன்றத்தில் வாதிடுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதியரசர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தக் கருத்தை கவனத்தில் கொண்ட நீதவான், முறைப்பாட்டை ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிட்டார்.

அன்றைய தினம் இந்தக் கோரிக்கை தொடர்பாக கருத்தில் கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது.

Related posts

ஏமாற்றப்படும் விவசாயிகள்

கொட்டும் மழையில் ஜனாதிபதி ரணிலுக்காக காத்திருந்த மக்கள்

editor

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கண்டித்து இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் கறுப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம்