உள்நாடு

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதற்காக ஹர்ஷான் டி சில்வாவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (15) பிற்பகல் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதுடன், வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டைக் கட்டியெழுப்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

திங்கள் முதல் 1,500 பஸ்கள் மேலதிக சேவையில்

விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தெஹிவளை துப்பாக்கிதாரி பலி

editor