உள்நாடு

இலங்கையில் திடீரென குறைந்த தங்கத்தின் விலை!

நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (14) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கெரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 240,500 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, இதன் விலை 246,000 ரூபாயாக காணப்பட்டது.

இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை, 266,000 ரூபாவாக இருந்த “24-கெரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 260,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சிறைக்கைதியின் வழிநடத்தலில் போதைப்பொருள் கடத்திய நபர் கைது

ரஷ்ய பெண்ணுக்கு இடையூறு – 05 பேர் மீண்டும் விளக்கமறியலில்

கடந்த 24 மணித்தியாலத்தில் 45 பேர் கைது