அரசியல்உள்நாடு

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டை வரவேற்கிறோம் – ஜனாதிபதி அநுர

இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை எட்ட முடிவு செய்திருப்பது, இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு முக்கியமான ஒப்பந்தம் மட்டுமல்ல, நிலையான அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முதல் மற்றும் முக்கிய முன்னெடுப்பாகும்.

ஒரு பெரிய பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் நெருக்கடியைத் தீர்க்க தோட்டாக்களுக்குப் பதிலாக வார்த்தைகளைப் பயன்படுத்த முடிவு செய்து தங்கள் அறிவுஞானத்தையும் ராஜதந்திரத் திறமையையும் வெளிப்படுத்தினர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் நெருங்கிய அண்டை நாடாகவும், நண்பராகவும், நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான ஒரு முக்கிய படியாக இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் இருக்கும் என்று இலங்கை நம்புகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான கலந்துரையாடலுக்கு எமது ஆதரவை வழங்குவதோடு எமது காலப்பகுதியிலேயே பிராந்திய அமைதியை அடைவதற்குத் தேவையான எந்தவொரு பங்களிப்பையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2025 மே 11 ஆம் திகதி

Related posts

உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படாது – பதுக்கி வைப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

editor

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

வெலிக்கடை சிறைக் கலவரம் : ரஞ்சனுக்கு மரண தண்டனை