அரசியல்உள்நாடு

பஸ் விபத்து தொடர்பில் மிகவும் கவலையடைகின்றேன் – ஜீவன் தொண்டமான் எம்.பி

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பஸ் விபத்து தொடர்பில் நான் மிகவும் கவலையடைகின்றேன் என தெரிவித்த ஜீவன் தொண்டமான்.,

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அனுதாபம் தெரிவித்துள்ளார்.

குறித்த பஸ் விபத்தில் 21 பேர் மரணம் அடைந்துள்ளதுடன், பலர் விபத்தில் சிக்குன்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குனமடைந்து வீடு திரும்ப பிரார்த்திப்போம் என கேட்டுக்கொன்டார்.

மேலும் விபத்தின்போது பஸ் வண்டிக்குள் சிக்குன்டவர்களை மீட்க போராடிய எம் உறவுகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று காலை நடந்த இந்த பஸ் விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related posts

பணி நீக்கம் செய்யப்பட்ட உழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜனாதிபதியின்  புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என கோரிக்கை

“மக்களுக்கு சேவை செய்வதே தலையாய கடமை என்பதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும்” – ரிஷாட்