அரசியல்உள்நாடு

புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு தோட்ட காணியை விடுவிக்குகமாறு அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் உத்தரவிட்டார்

இரத்தினபுரி மாதம்பை தோட்டத்தில் தொடர் குடியிருப்புகளின் தரைப்பகுதி திடீரென தாழ்ந்தது மாத்திரமல்லாமல் சிறு மண்சரிவு அணர்த்தமும் ஏற்பட்டுள்ளது .

மேற்படி சம்பவ இடத்திற்கு நேற்றைய தினம் (10) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேரடியாக விஜயம் செய்து சம்பவம் குறித்து அப்பிரதேச மக்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை பெற்று கொடுக்கும் முகமாக கொடக்கவெல பிரதேச செயலாளர், மாதம்பை தோட்ட அதிகாரி, கிராம உத்தியோகத்தர், சமூர்தி அதிகாரி மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர் உட்பட அரசியல் தரப்பினர்களை குறித்த இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டு மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு,
பிரதி அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

மேற்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக பாதுகாப்பான இடத்தில் தோட்ட காணிகளை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தோட்ட அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதி அமைச்சரின் வேண்டுகோளுக்கினங்க
மேற்படி தோட்ட காணியை விடுவிப்பது குறித்து தோட்ட அதிகாரி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேற்படி பிரச்சினைக்குத் உடனடி தீர்வு நேற்றைய தினத்தில் பெற்று கொடுத்த பிரதி அமைச்சரின்
விரைவான செயற்பாட்டை மக்கள் பாராட்டி உள்ளனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு!

New Diamond கப்பல் கெப்டனுக்கு அழைப்பாணை

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமனம்