உள்நாடுபிராந்தியம்

ரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (11) காலை புறப்பட்ட யாழ் ராணி ரயிலுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (11) காலை 7.30 மணியளவில் பளை கச்சார்வெளி புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதிய நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தில் பளை தம்பகாமம் பகுதியைச்சேர்ந்த 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-சப்தன்

Related posts

இவ்வாறு போனால் கடனை திருப்பிச் செலுத்த முடியாது – நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது பெரும் சவாலாக அமையும் – சஜித் பிரேமதாச

editor

அரச ஊழியர்களின் சம்பளம் 24 வீதத்தால் அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு 25 ஆயிரம் ரூபா, அடிப்படைச் சம்பளம் 57500 ரூபா – சஜித்

editor

எரிபொருள் வரியை நீக்குமாறு எரிசக்தி அமைச்சர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை