உள்நாடு

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார்

அரசியலமைப்பு சபையின் செயலாளராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட விடயங்கள் காரணமாக இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மிக்க தசநாயக்க கடந்த 2023ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் அதே ஆண்டில் அரசியலமைப்பு சபையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால் அது கனவாகவே இருக்கும் – ஜனாதிபதி அநுர

editor

தமிழரசுக்கட்சியிலிருந்து விலகினார் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா

editor

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு