அரசியல்உள்நாடு

அனைவரும் கள்வர்கள் என்றால் சுயேட்சை குழுக்களின் ஆதரவு எதற்கு ? – முஜிபுர் ரஹ்மான் எம்.பி கேள்வி

தோல்வியடைந்த மன்றங்களில் சுயேட்சை குழுக்களின் ஆதரவுடன் சபைகளை நிறுவுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

சுயேட்சை குழுக்களும் கள்வர்கள் தான் எனக் கூறிய அரசாங்கம் எவ்வாறு தற்போது அவர்களின் ஒத்துழைப்பினைக் கோர முடியும்? கொழும்பில் போட்டியிட்ட ஏனைய தரப்பினருடன் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.

அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தே கொழும்பு மேயர் தெரிவு செய்யப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்

மேலும் குறிப்பிடுகையில்,

தோல்வியடைந்த மன்றங்களில் சுயேட்சை குழுக்களின் ஆதரவுடன் சபைகளை நிறுவுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

தம்மை தவிர ஏனைய அனைவரும் கள்வர்கள் என்பதே தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரமாக இருந்தது.

இந்நிலையிலேயே தற்போது தம்மால் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாத உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு சுயேட்சை குழுக்களின் ஆதரவை அரசாங்கம் கோருகின்றது.

தேசிய மக்கள் சக்தி இன்னும் பொய்களைக் கூறுவதை நிறுத்தவில்லை. தேர்தலுக்கு முன்னரைப் போன்றே தற்போதும் பொய்களையே கூறிக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக கொழும்பு மாநகரசபை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்க சுயேட்சை குழுக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சுயேட்சை குழுக்களும் கள்வர்கள் தான் எனக் கூறிய அரசாங்கம் எவ்வாறு தற்போது அவர்களின் ஒத்துழைப்பினைக் கோர முடியும்?

கொழும்பில் போட்டியிட்ட ஏனைய தரப்பினருடன் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது.

தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஆட்சியமைப்பதாயின் அவர்களுக்கு ஆகக் குறைந்தது 59 உறுப்பினர்கள் காணப்பட வேண்டும்.

ஆனால் அக்கட்சியிலிருந்து 48 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்காததால் மேயர் வாக்கெடுப்பின் ஊடாகவே தெரிவு செய்யப்பட வேண்டும்.

அந்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியும் முன்னிலையாகும். ஏனைய கட்சிகள், சுயேட்சை குழுக்களின் ஒத்துழைப்பினைப் பெற்று கொழும்பு மாநகரசபை நிறுவும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும் என்று நம்புகின்றோம்.

கொழும்பில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அந்த வகையில் எமது மேயர் வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம்.

கொழும்பு மாத்திரமின்றி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சபைகளில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லை என்றார்.

Related posts

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை