அரசியல்உள்நாடு

ரணிலின் காலத்தில் மன்னாரில் மதுபானசாலை – தடைசெய்ய அரசிடம் ரிஷாட் போர்க்கொடி – முறைப்பாடு வழங்குமாறு கோரும் அமைச்சர் விஜயபால

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் மன்னார் பகுதியில் மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதிபத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு 8 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்னிடம் தொலைபேசியில் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை குறைத்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

நாட்டு மக்கள் எதிர்பார்த்த சிறந்த அரசியல் கலாசாரத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.கப்பம் பெறல் மற்றும் இலஞ்சம் வழங்கும் அரசியல் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்.

அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட சலுகைகள் ஏதும் வழங்கப்படவில்லை.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஒருநாள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘ முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் மன்னார் பகுதியில் மதுபானசாலை ஒன்றை அமைப்பதற்கு மதுபானசாலை அனுமதிபத்திரம் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக 8 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும்’ குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு ரிஷாத் பதியுதீனிடம் குறிப்பிட்டேன்.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சித்ரசிறி தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதற்கமைய 1982 ஆம் ஆண்டு பாராளுமன்ற ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பான சட்டத்தை திருத்தம் செய்வதற்கு சட்ட வரைஞர் திணைக்களத்தால் சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது.ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் மறக்கவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விடயங்களை குறிப்பிடுகிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

எவருக்கேனும் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை காணப்பட்டால் பாதுகாப்பு தொடர்பான கோரிக்கையை முன்வைக்கலாம்.அந்த கோரிக்கை தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கார்கள் என்றார்.

Related posts

பொய் சொல்லிய இந்த திசைகாட்டி தரப்பினர் இப்போது கிராமத்து அதிகராத்தையும் கோருகின்றனர் – சஜித் பிரேமதாச

editor

வெளிநாட்டுப் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி

காலி பாடசாலைகளை திங்களன்று மீள திறக்க தீர்மானம்