2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.
2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இடம்பெற்றது.
வாக்குப்பதிவு மாலை 4:00 மணி நிறைவடைந்த நிலையில், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
இந்த முறை தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் 8,287 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.