அரசியல்உள்நாடுபிராந்தியம்

புத்தளம் ரத்மல்யாய அல்காசிமி சிட்டி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய ஒருவர் கைது

புத்தளம் ரத்மல்யாய அல்காசிமி சிட்டி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், ரத்மல்யாய – அல்காசிமி சிட்டி பகுதியிலுள்ள வாக்கு சாவடிக்கு அண்மித்த பகுதியில் கட்சியொன்றின் ஆதரவாளர் ஒருவர் கட்சியின் சின்னம் அடங்கிய சிறிய துண்டு பிரசுரத்தினை வாக்களிக்க வருகை தரும் மக்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட விஷேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம் தலைமைய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-ரஸ்மின்

Related posts

ஆளுநரை தடுத்த பட்டதாரிகள்: 22 பேர் கைது

இதுவரை 888 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்