நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (06) உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது.
அந்த வைகயில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.
இன்றைய தினம் காலை 11 மணி வரை நிலைவரப்படி,
வவுனியா மாவட்டத்தில் 37 சத வீத வாக்குப் பதிவுகளும்
திருகோணமலை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும்
இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்
கோலை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்
மன்னார் மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவுகளும்
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்
அநுராதபுர மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும்
திகாமடுல்ல மாவட்டத்தில் 26 சத வீத வாக்குப் பதிவுகளும்
கொழும்பு மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்
மாத்தறை மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்
கம்பஹா மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்
பதுளை மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்
நுவரெலியா மாவட்டத்தில் 24 சத வீத வாக்குப் பதிவுகளும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்
மாத்தளை மாவட்டத்தில் 28 சத வீத வாக்குப் பதிவுகளும்
இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.