உள்நாடு

தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் திடீர் உயிரிழப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடமைகளுக்காக கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற கண்ணொருவ தாவர மரபணு வள மையத்தின் அபிவிருத்தி அதிகாரி ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிருஷாந்தி குமாரி தசநாயக்க வயது 33 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கலகெதர மினிகமுவவில் வசிப்பவர் ஆவர்.

திடீரென உடல்நிலையில் எற்பட்ட சுகவீனம், சிகிச்சைக்காக மாலை 5 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பிரேத பரிசோதனைக்குப் பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதியாகக் கூற முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

சவாலை ஏற்கத் தயார் என தலதா அத்துகோரள அறிவிப்பு

editor

இலங்கை இந்திய படகு சேவை விரைவில் ஆரம்பம் !

நாளை யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி அநுர

editor