உள்நாடு

கல்கிஸையில் துப்பாக்கிச் சூடு – 19 வயதுடைய இளைஞன் பலி

கல்கிஸை – கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (5) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் ​மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் தெஹிவளை – ஓபன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் சாத்தியம்

ஜா-எல பகுதியில் ஐவர் கைது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு