உள்நாடு

ஐஸ் போதைப்பொருட்களுடன் 24 வயதுடைய யுவதி கைது

அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் மிஹிதுபுர பகுதியில் இருபது கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருட்களுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சனிக்கிழமை (03) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் 20 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட 24 வயதுடைய யுவதியொருவர் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கொள்கலன்களை அகற்றும் பணி ஆரம்பம்

இதுவரை 9537 பேர் பூரண குணம்

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]