உள்நாடு

உயிருக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்புக் கோரும் தேசபந்து தென்னகோன்!

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (01) பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு கடிதம் எழுதி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றக் கும்பல் தலைவரான கஞ்சிபான இம்ரான், பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை கொலை செய்வதாக மிரட்டியதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன.

தேசபந்து தென்னகோனின் பாதுகாப்பு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டு, அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

இருப்பினும் கோரிக்கை விடுக்கப்பட்டால் அது பரிசீலிக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

தேசபந்து தென்னகோனின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க பொலிஸ பாதுகாப்பு மதிப்பீட்டை நடத்த உள்ளதாகவும் அவருக்குப் பாதுகாப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டால், அந்தப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

Related posts

ஆசிரியர் நியமனங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில்,,,!

சிகை அலங்கார கடையில் சடலம் மீட்பு – சம்மாந்துறை பகுதியில் சம்பவம்

editor

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு